கிடா பூசாரி மகுடி || Latest Tamil Cinema KIDA POOSARI MAGUDI Full Movie HD PART 12
Tamil Film Kida Poosari Magudi
Starring: Thamizh, Nakshatra, Ramdev, Singampuli, Kalai Rani, Power Star Srinivasan, Subburaj, Kambam Meena, M Ramasamy
Music by: Ilaiyaraaja
Directed by J.Jayakumar
Produced by T.Thamizhmani
நடிகர்கள்: தமிழ், நட்சத்திரா, ராம் தேவ், சிங்கம்புலி தயாரிப்பு: த தமிழ்மணி
இசை: இளையராஜா
இயக்கம்: ஜெயக்குமார் ஜெ
மிக எளிய கிராமத்துப் பின்னணி. சிக்கலில்லாத இயல்பான கதை. அய்யனாருக்கு ‘கிடா வெட்டும் பூசாரி’ மகுடிக்கு அக்கா மகள் நட்சத்திரா மீது கொள்ளைப் பிரியம். அவளையே திருமணம் செய்து கொள்ள ஆசை. ஆனால் ஆடுகளை நேசித்து வளர்க்கும் அவளுக்கு அப்படி எந்த ஆசையும் இல்லை.
அவள் சென்னையிலிருந்து அந்த ஊருக்கு வரும் ராம்தேவை விரும்புகிறாள். இந்த விவரம் மகுடியின் காதில் விழ, அருவாளோடு அக்கா வீட்டுக்குப் போய், பெண்ணை இழுத்து வந்து அய்யனார் சிலை முன்பாக பலவந்தமாக தாலி கட்டுகிறான்.
இந்த கட்டாயத் திருமணத்தால் ஆரம்பத்தில் மகுடியை வெறுக்கும் நட்சத்திரா, போகப் போக அவன் அன்பைப் புரிந்து ஏற்றுக் கொள்கிறாள். இந்த சூழலில்தான் மீண்டும் ராம்தேவ் ஊருக்கு வருகிறான். அவன் வந்த பிறகு மகுடி – நட்சத்திரா வாழ்க்கையில் பெரும் புயல். அந்தப் புயல் ஓய்ந்ததா, அவர்களைச் சாய்த்ததா என்பது மீதி கதை.
source